Home குறிப்பிடத்தக்கதுஅருங்காட்சியகம் புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம்

புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம்

by Vatsala Vijiendram
0 comment

Bujang Valley Archaeological Museum

மலாய் மொழியில் – Muzium Arkeologi Lembah Bujang

 

லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் மலேசிய நாட்டின் கெடா மாநிலம்,கோலா மூடா மாவட்டத்தில் ஆமைந்திருக்கிறது. மலேசியாவில் உள்ள ஒரே தொல்லியல் அருங்காட்சியகமாகும் இதுவாகும்.

மலேசிய அருங்காட்சியகத் துறை இந்த அருங்காட்சியகத்தை நிறுவிப் பராமரித்து வருகிறது.  இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அகழ்வாய்வுகளை மேற்கொள்வது, ஆய்வுகளைத் தொடர்வது மற்றும்  லெம்பா புஜாங் தளங்களில் கண்டறியப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துதல் ஆகும்.

புஜாங் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கண்டறிந்த சண்டிகளைப் பிரித்தெடுத்து அவற்றின் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே மீண்டும் இந்த வளாகத்தில் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறது.

லெம்பா புஜாங் இருந்ததற்கான சான்றுகளாக பல தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

 

 

 

You may also like

Leave a Comment